Sunday, April 17, 2011

பிரபஞ்ச காதல்

அவர்கள் பிரிந்திருந்த ஆறு மாதங்கள் 
வாடி, மனம் ஓய்ந்து,
வெள்ளை அணிந்து,
உறைந்தாள்  கன்னி .

அவன் வரும் நேரம் நெருங்குகிறது
அவள் காத்திருக்க, காதல் நினைவுகள் தூண்டி,
சோகம், கண்ணீர், மழை.
ஆனால், பொறுமையே வடிவானவலள்   அல்லவா அவள்
வெள்ளாடையை நீக்கி, நாணத்தில் விழி மறைத்து,
காத்திருந்தாள், கன்னி .

மூன்று மாதம், 
வெப்பத்தில் மிதந்தனர் காதலர்கள்.
பூட்டிவைத்த உணர்வுகள் வெடித்து,
வெப்பமும் புழுதியும் கலந்தன.
மெல்லிய காற்றின் ஆறுதலில்
வேர்வை தனணிய,
 துணைவியானால் காதலி. 

மென்மையான நாட்கள் பறந்தன...
அவனை பிரியும் நேரத்தை நினைத்து
பயம், துக்கம்.
ஆனால், அவள் கொண்டது
காலம் அரிக்காத பொறுமை அல்லவா...

காத்திருப்பாள்...
கண்ணீருடன் அவனை வழியனுப்பிவிட்டு
உணர்வுகளை அமைதிசெய்ய,
குளிர்ந்தாள்.
சில மாதங்களில்,
மனம் ஓய்ந்து,
வெள்ளை அணிந்து,
உறைந்தாள், 
எங்கள் அன்னை.
 
(edited by Dad)