Saturday, December 9, 2017

பித்தன் மடையன்
சித்தன் சடையன் 

அனைவரும் என்னுள்

என் விழிப்பு
என் சிரிப்பு
என் அறிவு
என் மடமை

நான் ஒருவன் அல்ல, என் முன்னோர்கள் அனைவரும் என் நினைவிலும் செயலிலும் உள்ளனர். இஃதே என் முற்றொருமை. இதன் மேலே, இந்த உலகில் கானும் நிகழ்ச்சிகளும் அனுபவங்களும் சேர்ந்து என் உலக காட்சியை உருவாக்குகின்றன. இவையே என் கருத்துகளாகின்றன. இவ்வாறு இயற்றப்பட்ட கருத்துகளுக்கு மாறான அநுபவங்களை சந்திக்கும் போது ஏற்படும் முரண்பாட்டை தீவிரமாக சிந்திக்க வேண்டும். 

இந்த அனுபவத்தின் கருத்தை ஏற்று கொள்வதா, தூக்கி வீசுவதா? இந்த கருத்து என்னையும் என்னை சார்ந்தவர்களையும் முன்னேற உதவுமா? என் தமிழ் சமூகத்தை முன்னேற உதவுமா? பல நூற்றாண்டுகளாக செதுக்கி அமைக்கப்பட்ட பண்புகளும் நாகரீகமும் இதனால் உயருமா, அழியுமா?


"பொய்யான சில பேர்க்குப் புது நாகரீகம் 
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம் 
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம் 
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்"

வாலியின் வார்த்தைகள் இன்றும் உண்மையாக ஒலிக்கின்றன. 

ஒவ்வொரு கருத்தையும் தீவிரமாக விசாரி. எந்த சிந்தனைக்கும் அடிமையாகாதே. தமிழன் எதற்கும் அடிமையல்ல, சிந்தனைகள் உட்பட.